ஏர் இந்தியா விமான விபத்து: பின்னணியில் விமானி ஒருவர்?
ஏர் இந்தியா விமான விபத்துக்கு, விமானி ஒருவர்தான் காரணம் என அமெரிக்க விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள விடயம்
260 பேரின் உயிரை பலிவாங்கிய அஹமதாபாத் விமான விபத்துக்கு விமானத்தின் விமானிதான் காரணம் என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
விபத்துக்குள்ளான விமானத்தை விமானத்தின் சக விமானியான கிளைவ் குந்தர் (Clive Kunder 32) இயக்க, தலைமை விமானியான சுமீத் சபர்வால் (Sumeet Sabharwal, 56) அதை மேற்பார்வை செய்துகொண்டிருந்திருக்கிறார்.
கிளைவின் கைகள் விமானத்தை இயக்குவதில் பிஸியாக இருக்க, சும்மா இருந்த சுமீத் வேண்டுமென்றே எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்லும் பொத்தானை அணைத்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகிறார்கள்.
ஆக, ஏன் எஞ்சினுக்குச் செல்லும் பொத்தானை அணைத்தீர்கள் என கேட்டது கிளைவ் என்கிறார்கள் அவர்கள். கிளைவ் பதற, சுமீத் இறுக்கமாக அமர்ந்திருந்ததாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
விமானி குறித்து மற்றவர்கள் கூறுவதென்ன?
சுமீத் தவறுதலாக எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்லும் பொத்தானை அணைக்க வாய்ப்பில்லை. அவர் 15,000 மணி நேரம் விமானம் இயக்கிய அனுபவம் உடைய விமானி.
இந்நிலையில், அவர் எப்படிப்பட்டவர் என்பது குறித்து அவரது நண்பர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள்.
சுமீத் ஆரம்பம் முதலே யாருடனும் சரியாக பேசமாட்டார் என்கிறார் அவரது சக விமானிகளில் ஒருவரான கபில் கோஹல்.
விமான பயிற்சி பள்ளியில் படிக்கும்போது திறமையற்றவர், போர் ஆசாமி என பெயர் பெற்ற சுமீத்திடம் இரண்டு சட்டைகள், இரண்டு ஷூக்கள் மற்றும் ஒரு பை மட்டுமே இருக்குமாம்.
ஆனால், சமீபத்திய நாட்களில் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார் சுமீத். ஓய்வு பெற சில மாதங்களே உள்ள நிலையில், தாய் மரணமடைய, வயதான தன் தந்தையை அவர்தான் கவனித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
இன்னொரு முக்கிய விடயம், மன நல பாதிப்பு காரணமாக சுமீத் சிறிது காலம் ஓய்விலிருந்ததாகவும் சிலர் கூறுகிறார்கள்.
ஆக, விபத்துக்கு விமானியான சுமீத்தான் காரணம் என அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ள நிலையில், இந்திய அதிகாரிகள் மௌனம் காக்கிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |