வெறும் ரூ.1500க்கு பறக்கலாம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட விமான நிறுவனம்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான பயண சலுகை கட்டணத்தை அறிவித்து இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.
அதிரடி சலுகை
பொங்கல் பண்டிகையையொட்டி இண்டிகோ உட்பட பல விமான நிறுவனங்கள் போட்டி போட்டு கட்டணங்களை குறைத்து வருகின்றன.
அந்த வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.
அதன்படி ரூ.1498யில் விமான கட்டணம் இதில் தொடங்குகிறது. இது 'ஃப்ளாஷ் சேல்' என்ற சிறப்பு டிக்கெட் விற்பனையின் கீழ் வருகிறது.
உள்நாட்டில் பயணிக்கும் விமானங்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு சலுகையில் முன்பதிவு செய்ய முடியும்.
Luggageஐ அதிகரிக்கலாம்
இந்த சலுகையில் 24ஆம் திகதி முதல் செப்டம்பர் 30ஆம் திகதி வரையிலான உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிலையத்தின் இணையதளம், மொபைல் செயலி அல்லது பிற முன்பதிவு தளம் மூலம் இந்த சலுகையின் கீழ் நீங்கள் விமான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும், டிக்கெட் முன்பதிவு செய்யும்போது நீங்கள் எந்த வசதிக் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை. இந்த விமான நிலையத்தின் 'எக்ஸ்பிரஸ் லைட்' என்ற சலுகை மூலம் கூடுதல் கட்டண குறைப்பும் கிடைக்கும்.
அத்துடன் நீங்கள் 3 கிலோ வரை உங்களது Luggageஐ அதிகரிக்கலாம். இதற்கு நீங்கள் எந்த கூடுதல் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |