திடீரென தீப்பிடித்த இந்திய விமானம்! பாதுகாப்பாக மீட்கப்பட்ட பயணிகள்: வீடியோ காட்சிகள்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் தீப்பிடித்து விபத்து.
பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என விமான நிலையம் அறிவிப்பு.
இந்தியாவின் கொச்சிக்கு செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் தீப்பிடித்து எரிந்தது.
ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் உள்ள விமான நிலையத்தில் இந்திய பயணிகள் விமானம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து இந்தியாவின் கொச்சி நகருக்கு பறக்கவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திடீரென தீ பிடித்து எரிந்தது.
#NDTVBeeps | Watch: Air India Express Plane Catches Fire At Muscat Airport, Passengers Safe pic.twitter.com/DcHZZzOAOC
— NDTV (@ndtv) September 14, 2022
இந்த திடீர் விபத்திற்கு விமானம் புறப்படுவதற்கு முன்பு இன்ஜினில் ஏற்பட்ட பழுதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் தீ பிடித்த போது விமானத்தில் உள்ளே இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அத்துடன் விமானம் தீப்பிடித்த போது மொத்தமாக 145 பயணிகள் விமானத்தில் இருந்துள்ளனர், அவற்றில் நான்கு பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: விடுவிக்கப்பட்ட 1,50,000 உக்ரைனிய வீரர்கள்: 4000 சதுர கிமீ தூரத்திற்கு பின்வாங்கிய ரஷ்ய படைகள்!
மேலும் இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.