கனடாவில் ஏர் இந்தியா விமானி கைது: மது அருந்திவிட்டு பணிக்கு வந்த அவலம்
மது அருந்தி விட்டு பணிக்கு வந்த ஏர் இந்தியா விமானி கனடாவில் விமான நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மது அருந்திவிட்டு பணிக்கு வந்த விமானி
கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில் இந்தியாவின் டெல்லிக்கு பறக்க இருந்த ஏர் இந்தியா விமானத்தின் விமானி மது அருந்திவிட்டு பணிக்கு வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஏர் இந்தியா விமானத்தின் விமானி கைது செய்யப்பட்டதை அடுத்து வான்கூவர் இருந்து டெல்லி வர இருந்த விமான பல மணி நேரம் தாமதமடைந்தது.

விமானம் புறப்படுவதற்கு முன்னதாக விமான நிலையத்தில் நடத்தப்பட்ட பாதுகாப்பு சோதனையின் போது விமானியின் மேல் மது வாசனை வீசுவதை கண்டுபிடித்ததை அதிகாரிகள் விமானியை பரிசோதனை செய்து கடைசியில் கைது செய்தனர்.
கனடா நாட்டு சட்டப்படி விமானிகள் மது அருந்திவிட்டு பணிக்கு வருவது மிகப்பெரிய குற்றமாகும்.
ஏர் இந்தியா விசாரணை
விமானி கைது செய்யப்பட்டதால், மாற்று விமானி ஏற்பாடு செய்யும் வரை பயணிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகினர்.

அதே நேரத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய விமானி மீது ஏர் இந்தியா துறை சார்ந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
அத்துடன் சம்பந்தப்பட்ட விமானி மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |