இயேசு ஓவியத்தை ஏலம் விட்ட டிரம்ப்: ஒற்றை கையெழுத்தில் ரூ. 23 கோடி நிதி திரட்டல்
இயேசுவின் ஓவியத்தை ஏலம் விட்டு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரூ.23 கோடி நிதி திரட்டியுள்ளார்.
இயேசுவின் ஓவியத்தை ஏலம் விட்ட டிரம்ப்
அமெரிக்காவின் புளோரிடாவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான மார்-ஏ-லாகோ இல்லத்தில் தொண்டு நிறுவன ஏலம் நடைபெற்றது.
Trump put a stunning painting of Jesus Christ up for auction and the bids were flying.
— Digital Gal (@DigitalGalX) January 1, 2026
Opening bid: $100K
Current bid: $250K
Every dollar raised goes to St. Jude Children’s Research Hospital and the Sheriff’s Department.
Big generosity. Big impact. 🇺🇸 pic.twitter.com/9IeSuxFuUV
பிரபல கிறிஸ்தவ ஆன்மீக ஓவியரான வெனெசா ஹோரபியூனா நடனமாடிக்கொண்டே இயேசுவின் புகைப்படம் ஒன்றை வரைந்தார்.
இதையடுத்து நடத்தப்பட்ட டிரம்பின் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டும் ஏலத்தில், இயேசுவின் புகைப்படமானது சுமார் ரூ.23 கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
மதிப்பை கூட்டிய டிரம்ப் கையெழுத்து
வெனெசா ஹோரபியூனா வரைந்த ஓவியத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்து போட்ட பிறகு, ஓவியத்தின் விலை இறுதியில் $2.75 மில்லியன் டொலருக்கு விற்பனையானது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.23 கோடியாகும்.

ஏலத்தின் போது வெனெசா ஹோரபியூனா வரைந்த இயேசு ஓவியத்தின் விலை தொடக்க விலை ரூ. 8.5 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏலத்தின் மூலமாக கிடைத்த தொகையை டிரம்ப் St.Jude’s குழந்தைகள் மருத்துவமனை மற்றும் உள்ளூர் ஷெரீப் அலுவலகங்களுக்கு வழங்கியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |