2025-ல் ஏர் இந்தியா விமானிகள் வாங்கும் சம்பள விவரம்
2025-ல் ஏர் இந்தியா (Air India) விமானிகள் வாங்கும் சம்பளம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
டாடா குழுமம் நிர்வகிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானிகள் சம்பள விவரங்கள் விமானப் பணியாளர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளன.
2022-ல் தனியார் மயமாக்கப்பட்ட ஏர் இந்தியா, Vistara நிறுவனத்துடன் இணைந்து, Singapore Airlines-ஐ சிறிய பங்குதாரராக இணைத்துள்ளது.
தற்போது 2,000க்கும் மேற்பட்ட விமானிகள் பணியாற்றும் நிலையில், புதிய விமானங்கள் வாங்கும் திட்டத்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்க உள்ளன.
விமானிகள் சம்பள விவரம்:
- பயிற்சி விமானிகள் (TRAINEE PILOT): மாதம் ரூ.50,000; வருடம் ரூ.6 லட்சம்.
- First Officer: வருடம் ரூ.36 லட்சம் முதல் ரூ.72 லட்சம்; மாதம் ரூ.2.35 லட்சம் முதல் ரூ.3.45 லட்சம். பறக்கும் நேரத்திற்கு ரூ.1,500 முதல் ரூ.4,000.
- Captain: வருடம் ரூ.60 லட்சம் முதல் ரூ.90 லட்சம்; narrow-body allowance ரூ.25,000, wide-body ரூ.75,000. பறக்கும் நேரத்திற்கு ரூ.4,500 முதல் ரூ.10,000.
- Senior Commander: வருடம் ரூ.1 கோடி முதல் ரூ.1.25 கோடி; பறக்கும் நேரத்திற்கு ரூ.9,000–ரூ.12,000.
13 சதவீதம் பெண் விமானிகளைக் கொண்ட ஏர் இந்தியா, உலகளவில் பெண் விமானிகள் அதிகம் உள்ள நிறுவனமாக திகழ்கிறது. 200 பேர் ஏர் இந்தியாவில் பணியாற்றுகின்றனர்.
மேலும், விமானிகள் மருத்துவ காப்பீடு, ஓய்வூதிய திட்டம், வீட்டு வசதி, இலவச விமான பயணம் உள்ளிட்ட பல நலன்கள் பெறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Air India pilot salary 2025, Air India Vistara merger pay, Tata Group aviation salaries, Air India captain pay scale, Indian pilot salary comparison, Air India female pilot stats, Air India cadet program 2025, Air India pilot benefits, Air India hiring process, Air India aircraft fleet 2025