உலக ஸ்டார்ட்அப் மாநாட்டில் மின்சார விமானத்தின் மூலம் கவனம் ஈர்த்த தஞ்சாவூர் நிறுவனம்
குறைந்த விலையில் மின்சார விமானத்தை தயாரித்த தஞ்சாவூர் நிறுவனம் உலக ஸ்டார்ட்அப் மாநாட்டில் கவனத்தை ஈர்த்துள்ளது.
தஞ்சாவூரை தலைமையிடமாகக் கொண்ட புள்ளினம் ஏரோஸ்பேஸ் டெக்னாலஜீஸ் (PAT) நிறுவனம், கோயம்புத்தூரில் நடைபெற்ற Global Startup Summit-ல் தனது புதிய மின்சார விமான PAT LSA-வை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது இரண்டு பயணிகளுக்கான Light Sport Aircraft (LSA) வகையைச் சேர்ந்தது.
விமான பயணத்தை மலிவாகவும், சுற்றுசூழலுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் நோக்குடன் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
PAT நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் CEO சி.எஸ். கருணாகரன் மற்றும் COO சிவா பிரசாத் ஆகியோர் தெரிவித்ததாவது, இந்த விமானம் பயிற்சி பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட பயணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விமானங்கள் ஒரு பயணத்திற்கு ரூ.2,500 வரை செலவாகும் நிலையில், இந்த மின்சார வாகனம் ரூ.4-க்கும் குறைவாக செலவாகும் என அவர்கள் கூறினர்.
PAT LSA விமானம், புஷர் ப்ரொப்பல்ஷன் எனப்படும் பின்புற இயக்க அமைப்புடன் வருகிறது. இது விமானத்தின் உள்ளக இடத்தை அதிகரிக்கிறது மற்றும் 270-டிகிரி வெளிப்புற பார்வையை வழங்குகிறது.
தற்போது 2 இருக்கை மொடல் அறிமுகமாகியுள்ள நிலையில், எதிர்காலத்தில் நான்கு, ஆறு மற்றும் பத்து இருக்காய் மொடல்களும் உருவாக்கப்படும் என திட்டமிடப்பட்டுள்ளது.
பறக்கக்கூடிய மொடல் 12-18 மாதங்களில் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
DGCA-உடன் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றும் வகையில் முன்னாள் DRDO இயக்குநர் உள்ளிட்ட வல்லுநர்களின் ஆலோசனையும் பெறப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
PAT நிறுவனம் முதலீட்டாளர்களை பங்குதாரர்களாக இணைக்க விரும்புகிறது. இந்த முயற்சி இந்தியாவின் விமான துறையில் புதிய புரட்சிக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Pullinam Aerospace electric aircraft, PAT LSA electric plane India, Thanjavur startup electric aviation, Global Startup Summit 2025 Coimbatore, India electric light sport aircraft, PAT LSA 2-seater prototype, Low-cost electric aircraft India