இந்தியர்கள், இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா
50-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது.
அமெரிக்க நிதித்துறை, ஈரானிய எரிசக்தி ஏற்றுமதியை ஊக்குவித்த 50-க்கும் மேற்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் கப்பல்களுக்கு தடைகளை விதித்துள்ளது.
இதில் இந்தியரான வருண் புலா, சோனியா ஷ்ரேஸ்தா மற்றும் ஐயப்பன் ராஜா ஆகியோர் அடங்குவர்.
இவர்கள் ஈரானிய எண்ணெய் மற்றும் LPG ஏற்றுமதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வருண் புலா, மார்ஷல் தீவுகளில் பதிவு செய்யப்பட Bertha Shipping Inc. நிறுவனத்தை நடத்துகிறார்.
இந்த நிறுவனம் PAMIR என்ற கப்பலை இயக்குகிறது,இது 2024 ஜூலை முதல் சீனாவுக்கு 4 மில்லியன் பீப்பாய்கள் ஈரானிய LPG ஏற்றுமதி செய்துள்ளது.
ஐயப்பன் ராஜா Evie Lines Inc. என்ற நிறுவனத்தை நடத்துகிறார். SAPPHIRE GAS எனும் கப்பலை இயக்கும் இந்நிறுவனம், 2025 ஏப்ரல் முதல் சீனாவிற்கு 1 மில்லியன் பீப்பாய்கள் LPG ஏற்றுமதி செய்துள்ளது.
சோனியா ஷ்ரேஸ்தா இந்தியாவிலுள்ள Vega Star Ship Management Pvt Ltd. நிறுவனத்தை நடத்துகிறார். NEPTA என்ற கப்பலை இயக்கும் இந்நிறுவனம், 2025 ஜனவரி முதல் பாகிஸ்தானுக்கு ஈரானிய LPG ஏற்றுமதி செய்துள்ளது.
இந்த தடைகள் அமெரிக்காவில் உள்ள அல்லது அமெரிக்க நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நபர்களின் சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் உரிமைகளை முடக்குகின்றன.
மேலும், 50 சதவீதம் அல்லது அதற்கு மேல் பங்குகளை கொண்ட நிறுவனங்களும் தடைக்குள்ளாகின்றன.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, உலகளாவிய பாதுகாப்பு மற்றும் அரசியல் நிலைமைகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
US sanctions India, Indian nationals Iran oil trade, Iran energy exports, US sanctions, Iranian LPG shipments