அமெரிக்காவின் AIM-120 AMRAAM ஏவுகணைகளை வாங்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் அமெரிக்காவிடமிருந்து AIM-120 ஏவுகணைகளை பெறவிருக்கிறது.
அமெரிக்காவின் போர்த்துறை (Department of War) சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், பாகிஸ்தான் AIM-120 air to air ஏவுகணைகளை பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையேயான இராணுவ உறவுகள் மீண்டும் வலுப்பெறுவதை குறிக்கிறது.
Raytheon நிறுவனம் தயாரிக்கும் AIM-120 AMRAAM ஏவுகணைகளுக்கான ஒப்பந்தத்தில் 41.6 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு தற்போது 2.51 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் தவிர பிரித்தானியா, ஜேர்மனி, ஜப்பான், அவுஸ்திரேலியா, சவூதி அரேபியா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகளும் ஏவுகணைகளை பெறவிருக்கின்றன.
இந்த ஏவுகணைகள் பாகிஸ்தான் விமானப்படையின் F-16 போர் விமானங்களுடன் மட்டுமே பொருந்தக்கூடியவை.
2019-ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் MiG-21 விமானம் வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் AIM-120 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பாகிஸ்தான் F-16 போர் விமானங்களை மேம்படுத்தும் திட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்திற்கான பணிகள் 2030 மே மாதத்திற்குள் முடிக்கப்படவுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Pakistan AIM-120 missiles, US arms deal Pakistan, F-16 missile upgrade, AMRAAM missile sale, Pakistan US defense ties