மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்: ஏர் இந்தியா எடுத்துள்ள அதிரடி முடிவு
டெல் அவிவ் இடையிலான அனைத்து விமான போக்குவரத்தையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
விமானங்கள் ரத்து
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்திற்கு செல்லக்கூடிய அனைத்து விமான போக்குவரத்தையும் இடைநிறுத்துவதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய கிழக்கின் நிலவரங்களை மிக நெருக்கமாக கவனித்து வருவதாகவும், பயணிகள் மற்றும் விமான குழுவின் பாதுகாப்பே முதன்மையானது என்று தெரிவித்துள்ளது.
அத்துடன் தற்போது மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, டெல் அவிவ் நகருக்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து விமான போக்குவரத்தையும் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்துவதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
அத்துடன் டெல் அவிவ் நகருக்கு டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கான பணம் திரும்ப வழங்கப்பட்டு வருவதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |