பிரித்தானியாவிற்கு புறப்பட்டு அவசரமாக ரஷ்யாவில் தரையிறக்கப்பட்ட Air India விமானம்
நியூ டெல்லியிலிருந்து பிரித்தானியாவின் ப்ரிமிங்காம் நோக்கி சென்ற ஏர் இந்தியா விமானம், முற்றிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்தில் ஷெரெமெட்யேவோ விமான நிலையத்தில் அவசரமாக இறங்கியது.
ஏர் இந்தியாவின் AI 113 என்ற Boeing 787 விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விமானத்தின் பரிசோதனைகள் முடிந்த பிறகு, விமானம் மாஸ்கோவிலிருந்து புறப்பட்டு, வியாழக்கிழமை காலை ப்ரிமிங்காமிற்கு வெற்றிகரமாக சென்றடைந்தது.
ஏர் இந்தியா இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், ஒரு வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி, பாதுகாப்பு காரணங்களால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தில் இருந்த பயணிகளின் எண்ணிக்கை இதுவரை தெரியவில்லை.
இந்தாண்டு ஜூலை மாதத்தில், டெல்லியிலிருந்து சான் பிரான்சிஸ்கோ நோக்கி புறப்பட்ட மற்றொரு ஏர் இந்தியாவின் விமானம், ரஷ்யாவின் கிராஸ்நோயார்ஸ்க் விமான நிலையத்தில் அவசரமாக திருப்பிவிடப்பட்டது.
அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள், பின்னர் ஏர் இந்தியா ஏற்பாடு செய்த சிறப்பு விமானத்தில் பாதுகாப்பாக அமெரிக்கா கொண்டுசெல்லப்பட்டனர். மேலும், சான் பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில் அவர்களின் கிளியரன்ஸ் நடவடிக்கைகளில் உதவி செய்யப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Air India, Air India’s UK-bound flight makes precautionary landing at Moscow, Boeing 787 operating flight AI 113