காற்று மாசுபாட்டால் ஆண்களின் உயிரணுக்கள் நீந்துவதில் ஏற்படும் தடை: புதிய சீன ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
காற்று மாசுபடுத்தலால் ஆண்களின் உயிரணுக்கள் நீந்தி செல்வதில் தடை ஏற்பட்டு அதன் இலக்கில் இருந்து திசை மாறுவதாக சீன ஆராச்சி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உலகில் இயற்கையான முறையில் கருத்தரித்தல் ஏற்பட்டுள்ள சிக்கல் என்பது மிகப்பெரிய உடல்நல பாதிப்பாக கருதப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் காற்று மாசுபடுவதால் ஆண்களின் உயிரணுக்கள் நீந்தி செல்வதில் தடை ஏற்பட்டு அதன் இலக்கான கருமுட்டை அடையாமல், அதில் இருந்து திசைமாறி செல்வதால் கருவுறுதல் பாதிப்புகள் ஏற்படுகிறது என தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த காற்று மாசுபாட்டை குறைப்பதன் மூலம் ஆண்களின் கருவுறுதல் திறன் அதிகரிப்பதாகவும் , asthenozoospermia போன்ற நோய்களில் பாதிக்கப்படுவது குறைவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வின் முடிவில் காற்றில் 2.5 என்ற அளவில் துகள் கலந்து இருந்தால் அது இரத்தத்தில் கலந்து asthenozoospermia போன்ற நோய்களை உண்டாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த asthenozoospermia நோய் என்பது ஆண்களின் விந்தில் உள்ள உயிரணுக்கள் நீந்தி சென்று கருமுட்டையை அடைய முடியாமல் தோல்வி அடைவதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷாங்காயின் tertiary என்ற மருத்துவமனையில் சுமார் 33,876 நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை துகள்களால் கருவுறுதலில் ஏற்படும் பாதிப்புகளை எந்த ஒரு ஆய்வும் வெளிப்படுத்தாத நிலையில் இது மிக முக்கிய ஆய்வாக கருதப்படுகிறது.
மேலும் இந்த சோதனையானது கடந்த 2013ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டுதெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.