இலங்கை தலைநகரின் காற்று தரத்தில் வீழ்ச்சி - தரவுகள் கூறுவது என்ன?
வடக்குப் பகுதியில் இருந்து ஏற்படும் எல்லை தாண்டிய நிலைமைகள் காரணமாக கொழும்பு 07, யாழ்ப்பாணம், காலி, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு (AQI) சற்று ஆரோக்கியமற்ற நிலைக்குக் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) எச்சரிக்கிறது.
அதன்படி இந்த நிலை உணர்திறன் மிக்க நபர்களுக்கு சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தினால், பொதுமக்கள் மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு NBRO அறிவுறுத்தியுள்ளது.
நேற்று (26) அன்று, பெரும்பாலான நகரங்களில் SL AQI மிதமான மட்டத்தில் இருந்ததாகவும், நுவரெலியாவில் நல்ல மட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் NBRO எச்சரித்துள்ளது.
இதற்கிடையில், மற்ற பெரும்பாலான நகரங்களில் SL AQI மிதமான மட்டத்தில் இருக்கும் என்று NBRO தெரிவித்துள்ளது, அதிகபட்ச AQI அளவு இன்று (27) காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை மற்றும் பிற்பகல் 1.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை இருக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது.
ஒப்பீட்டளவில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் நாட்டின் பெரும்பாலான நகரங்களில் SL AQI நன்றாக இருக்கும் என்று NBRO குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |