கார் சீக்கிரமாக Cooling ஆக வேண்டுமா? ஒரே ஒரு விடயத்தை மறக்காமல் செய்தால் போதும்
கோடை காலத்தில் உங்கள் காரை உடனடியாக குளிர்விக்க காரில் இருக்கும் பட்டனை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
இந்தியாவில் தற்போது பல இடங்களில் வெயில் சுட்டரிக்க தொடங்கிவிட்டது. இந்த சூழ்நிலையில் காரில் பயணம் செய்பவர்கள் நிச்சயமாக ஏசியை போட்டு தான் பயணம் செய்வார்கள்.
அதே போல, வெளிக்காற்றும் அனலாக இருக்கும் என்பதால் காரின் ஜன்னலை திறந்து வைக்க முடியாதபடி இருக்கும். இதனால், அவர்கள் காரின் ஜன்னலை மூடி வைத்து ஏசியை ஆன் செய்து வைத்து பயணிப்பார்கள்.
காற்று மறுசுழற்சி பொத்தான்
காரில் உள்ள இந்த பட்டனை அழுத்தியவுடன் சில நிமிடங்களில் கார் குளிர்ச்சியடைகிறது மற்றும் வெப்பத்திலிருந்து நம்மை விரைவாகவே பாதுகாத்துக் கொள்ளலாம். இது காற்று மறுசுழற்சி பொத்தான் (Air Recirculation Button) என்று அழைக்கப்படுகிறது.
இந்த பட்டனை நீங்கள் அழுத்தியவுடன் காரின் கேபின் உடனடியாக குளிர்ச்சியடைய ஆரம்பிக்கும். இந்த பட்டனின் செயல்பாடு என்னவென்றால் காற்று மறுசுழற்சி அமைப்பை இயக்குவதாகும். இதனால், காரின் உள்ளே உள்ள காற்று விரைவாக குளிர்ச்சியடைய தொடங்குகிறது.
கோடைகாலத்தில் நீங்கள் காரில் உள்ள ஏசியை ஆன் செய்தவுடன் வெளியில் இருந்து வரும் அனல் காற்றை குளிர்விக்க தொடங்கும்.
இதற்கு காரில் உள்ள Air condition system கடினமாக இயங்க வேண்டியிருக்கும். இதனால், கார் கேபின் சீக்கிரமாக Cooling ஆகாது.
இதுவே நீங்கள் காற்று மறு சுழற்சி பொத்தானை அழுத்தினால் கார் வெளியில் இருந்து காற்றை குளிர்விக்கத் தொடங்குகிறது. இதனால், கார் கேபின் சீக்கிரமாக Cooling ஆகும்.
இந்த பட்டன் ஏசி கன்சோலுக்கு அருகில் உள்ளது. இதனை நீங்கள் கோடைகாலத்தில் மட்டும் பயன்படுத்துவது நல்லது. குளிர்காலத்தில் இது பயன்படுத்தப்படுவதில்லை.
ஆனாலும், கார் கேபினுக்குள் இருக்கும் கண்ணாடியில் இருந்து மூடுபனியை அகற்ற பயன்படுத்தப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |