அதிகரிக்கும் பதற்றம்... தலைநகர் டெல்லியில் ஏர் சைரன் சோதனை
இந்தியா- பாகிஸ்தான் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், சோதனைப் பயிற்சியின் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை தேசிய தலைநகரில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் முழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வான் தாக்குதல் அபாயம்
எல்லைக்கு அப்பால் இருந்து இரண்டு அலை ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வான் தாக்குதல் அபாயம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள நகரங்களில் ஏர் சைரன் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சோதனைக்கு முன்னதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், டெல்லி அரசாங்கம், ஐடிஓவில் உள்ள பொதுப்பணித் துறை தலைமையகத்தில் நிறுவப்பட்ட ஏர் ரெய்டு சைரன்களை சிவில் பாதுகாப்பு இயக்குநரகம் பரிசோதிக்கும் என்றும்,
மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது. சோதனையானது பிற்பகல் 3.00 மணிக்கு தொடங்கி 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பதட்டப்பட வேண்டாம்
மட்டுமின்றி, சமூக மற்றும் மின்னணு ஊடகங்கள் மூலம் போதுமான விளம்பரம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது, இதனால் பொதுமக்கள் அமைதியாக இருக்கவும், மேற்கூறிய பயிற்சியின் போது பீதி அடைய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்றும், சைரன்களைக் கேட்கும்போது பதட்டப்பட வேண்டாம் என்றும் மாவட்ட நீதிபதி (மத்திய) ஜி. சுதாகர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தேசிய தலைநகரம் முழுவதும் இதுபோன்ற 40 சைரன்கள் நிறுவப்படும் என்றும், அவை ஒவ்வொன்றும் 5 கி.மீ பரப்பளவை உள்ளடக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திடீரென்று டெல்லியில் ஏர் சைரன் சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது, மக்களிடையே சந்தேகத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |