Airbus நிறுவனத்தின் திடீர் முடிவு... உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்

Flight
By Arbin Nov 29, 2025 03:19 AM GMT
Report

Airbus நிறுவனம் தங்களது A320 வரிசை 6,000 விமானங்களில் பராமரிப்பு பணிகளை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது, உலக அளவில் விமான சேவையை உடனடியாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உலகம் முழுவதும்

Airbus நிறுவனத்தின் இந்த ஒற்றை முடிவானது உலகம் முழுவதும் சரிபாதிக்கு மேல் விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Airbus நிறுவனத்தின் திடீர் முடிவு... உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் | Airbus Issues Global Flight Disruption

இதனையடுத்து, அமெரிக்காவிலிருந்து தென் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்லும் விமான சேவைகளில் தாமதங்கள் மற்றும் ரத்துசெய்தல்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Airbus நிறுவனத்தின் 55 வருட வரலாற்றில் இது மிகப்பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மட்டுமின்றி, Boeing நிறுவனத்தின் 737 வரிசையைவிட A320 அதிகமாக விற்பனை செய்யப்பட்ட மொடல் என தரவுகள் வெளியான சில வாரங்களில் Airbus நிறுவனம் பராமரிப்பு வேலைகளுக்கான முடிவை அறிவித்துள்ளது.

கைவரிசை காட்டிய வடகொரியா... தென் கொரிய கிரிப்டோ நிறுவனத்தில் பெருந்தொகை கொள்ளை

கைவரிசை காட்டிய வடகொரியா... தென் கொரிய கிரிப்டோ நிறுவனத்தில் பெருந்தொகை கொள்ளை

Airbus நிறுவனம் பராமரிப்பு பணிகளை முன்னெடுக்க இருப்பதாக அறிவித்தபோது, 350 விமான சேவை நிறுவனங்களின் கிட்டத்தட்ட 3,000 விமானங்கள் உலகமெங்கும் சேவையில் இருந்தது.

பராமரிப்பு பணி என்பது மென்பொருள் பதிவேற்றம் என்றே தகவல் வெளியானது. ஆனால், உடனடியாக அது முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இந்த A320 வரிசை விமானங்கள் மீண்டும் பறப்பதற்கு முன்னர் முடிக்கப்பட வேண்டும் என்றும் Airbus நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

உலகில் மிக அதிகமாக A320 வரிசை விமானங்களைப் பயன்படுத்தும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம், தங்களின் 480 A320 வரிசையில் 340 விமானங்களுக்கு மென்பொருள் பதிவேற்றம் தேவை என தெரிவித்துள்ளது.

Airbus நிறுவனத்தின் திடீர் முடிவு... உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் | Airbus Issues Global Flight Disruption

ஒவ்வொரு விமானங்களுக்கும் 2 மணி நேரம் தேவை என்பதால், சனிக்கிழமைக்குள் பராமரிப்பு வேலைகளை முடித்துவிடலாம் என்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஜேர்மனியின் லுஃப்தான்சா, இந்தியாவின் இண்டிகோ மற்றும் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட ஈஸிஜெட் ஆகிய நிறுவனங்கள் மொத்த சேவையையும் ரத்து செய்துவிட்டு பராமரிப்பு பணிகளை முன்னெடுக்க முடிவு செய்துள்ளது.

8ம் திகதி வரையில்

கொலம்பிய விமான சேவை நிறுவனமான அவியான்கா, Airbus நிறுவனத்தின் இந்த முடிவால், அதன் 70 சதவீதத்திற்கும் அதிகமான விமான சேவைகள் பாதித்ததாகக் கூறியது. இதனையடுத்து டிசம்பர் 8ம் திகதி வரையில் பயணச்சீட்டு விற்பனையை ரத்து செய்துள்ளது.

Airbus நிறுவனத்தின் திடீர் முடிவு... உலகம் முழுவதும் விமான சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் | Airbus Issues Global Flight Disruption

அவுஸ்திரேலியாவில், ஜெட்ஸ்டார் நிறுவனம் தங்களின் உள்நாட்டு விமான சேவைகளை ரத்து செய்தது. ஜப்பானின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான ANA தங்களின் 65 விமானங்களை ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

லண்டனைப் பொறுத்தமட்டில் கேட்விக் விமான நிலையத்தில், குறைந்த எண்ணிக்கையிலான விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி Airbus நிறுவனத்தின் இந்த முடிவால் எந்த தாக்கத்தையும் காணவில்லை என்று ஹீத்ரோ அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளனர்.

அமெரிக்காவில் மறுஆய்வு செய்யப்படும் 19 நாட்டவர்களின் நிரந்தர வதிவிட உரிமம்

அமெரிக்காவில் மறுஆய்வு செய்யப்படும் 19 நாட்டவர்களின் நிரந்தர வதிவிட உரிமம்

இதனிடையே, பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான விமானங்களில் வன்பொருள் மாற்றப்பட வேண்டியிருக்கலாம், இதனால் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Airbus நிறுவனத்தின் A320 வரிசையில் உலகம் முழுவதும் 11,300 விமானங்கள் சேவையில் உள்ளன. 1984ல் அறிமுகம் செய்யப்பட்ட A320 வரிசை விமானங்கள் அனைத்தும் fly-by-wire கணினி கட்டுப்பாடுகளால் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US