உக்ரைனில் விழுந்து நொறுங்கிய விமானம்... உயிரிழப்புகள் ஏற்பட்டிருப்பதாக ராணுவம் தகவல்
உக்ரைனில் ராணுவ போக்குவரத்து விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் தென்கிழக்கில் உள்ள Zaporizhzhia நகரிலே இந்த விபத்து நடந்துள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானதை Zaporizhzhia பிராந்திய ராணுவ நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
Zaporizhzhia பிராந்திய ராணுவ நிர்வாகம் அளித்த தகவலில், இன்று காலை Antonov AN-26 விமானம் Zaporizhzhia-வில் உள்ள Vilniansk மாவட்டத்தில் விபத்துக்குள்ளானது.
எப்படி இருந்த பூமி.. இப்படி அழிகிறது! அதிர வைத்த கூகுள் டூடுள் படங்கள்
விமானம் சோதனை ஓட்டத்தின் போது விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்ட வருவதாகவும், விரைவில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் என Zaporizhzhia பிராந்திய ராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.