புளோரிடாவில் சாலையில் தரையிறங்கிய விமானம்: பிக்கப் டிரக் மீது மோதி விபத்து
Aircraft strikes truck on busy Florida roadway: அமெரிக்காவில் சாலையில் அவசரமாக தரையிறங்கிய சிறிய ரக விமானம் பிக்கப் டிரக் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாலையில் தரையிறங்கிய விமானம்
சனிக்கிழமை பிற்பகல் புளோரிடாவின் லீ கவுண்டி பகுதியில் செஸ்னா 172(Cessna 172) என்ற சிறிய ரக விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கிருந்த பிரதான சாலையில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
பிரதான Bayshore சாலையில் இந்த விமானம் அவசரமாக தரையிறங்கிய போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த பிக்கப் டிரக் ஒன்றின் பின் பகுதியில் விமானம் மோதியது.

இந்த விபத்து சம்பவத்தினால் விமானம் மற்றும் பிக்கப் டிரக் இரண்டும் பலத்த சேதமடைந்தன.
மேலும் முக்கிய போக்குவரத்து பாதையில் பல மைல் தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
A prop plane carrying two pilots crash-landed on a busy road in Fort Myers, Florida, on Saturday, rear-ending a pickup truck. No injuries were reported, and the FAA is leading the investigation. https://t.co/rNC07ugCCi
— Breaking911 (@Breaking911) November 7, 2026
அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த நபர்களுக்கோ அல்லது சாலையில் பயணித்த நபர்களுக்கோ இந்த விபத்தினால் எந்தவொரு ஆபத்தும் ஏற்படவில்லை என்பதை மீட்பு குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விமானத்தில் ஏற்பட்டுள்ள எஞ்சின் கோளாறுக்கான காரணத்தை கண்டறிய அமெரிக்க பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.