ஏர் இந்தியா விமானத்தின் என்ஜினில் தீ: டெல்லியில் அவசர கால தரையிறக்கம்
ஏர் இந்தியா விமானத்தின் என்ஜினில் தீ எச்சரிக்கை காரணமாக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் தீ எச்சரிக்கை
பெங்களூருவில் இருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பான எச்சரிக்கையை தொடர்ந்து விமானம் அவசர கால தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை இரவு நடைபெற்ற இந்த சம்பவத்தை போது டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் விமானமானது அவசரகால தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

தகவல்களின்படி, ஏர் இந்தியாவின் ஏர்பஸ் A320 ரக விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தின் 29R ஓடுபாதையில் இரவு 9.30 மணிக்கு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தின் போது விமானத்தில் கிட்டத்தட்ட 171 பயணிகள் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிர்ஷ்டவசமாக விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளும், விமான நிலைய ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு இருப்பதாகவும், பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பே எங்களின் முதன்மை என்று ஏர் இந்தியா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |