அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்த வரைவு அறிக்கை: முடிவுக்கு வரும் மோதல்?
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் நிறுத்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது.
இறுதி செய்யப்பட்ட வரைவு அறிக்கை
அமெரிக்கா - ஈரான் இடையிலான சமாதான போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான வரைவு அறிக்கையானது இறுதி செய்யப்பட்டு இருப்பதாக ஈரானிய தொழிலாளர் செய்தி நிறுவனம்(ILNA) தகவல் தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்
இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ மோதல் அனைத்து முனைகளிலும் நிறுத்தம்.
அதன்படி எந்தவொரு தரப்பும் எதிர் தரப்பின் உள்கட்டமைப்புகளை தாக்கி அழிக்க கூடாது.
பாரசீக வளைகுடா மற்றும் ஹார்மூஸ் நீரிணை வழியாக தடையற்ற போக்குவரத்தை உருவாக்க அமெரிக்கா மற்றும் ஈரான் இணைந்து புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை உருவாக்க ஒப்புக் கொள்ளுதல்.

ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு ஈரான் மீதான அமெரிக்க பொருளாதார தடைகள் படிப்படியாக நீக்கப்படும்.
மீதமுள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்க அடுத்த 7 நாட்களுக்கு இருதரப்பும் பேச்சுவார்த்தையை தொடங்குதல் ஆகியவை வரைவு அறிக்கையில் முக்கிய அம்சமாக இடம் பெற்று இருப்பதாக பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |