ஜேர்மனிக்கு பல்லாயிரக்கணக்கான விமானங்களின் சேவையை நிறுத்தும் விமான நிறுவனம்
ஜேர்மனிக்கு பல்லாயிரக்கணக்கான விமானங்களின் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக விமான நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது.
பல்லாயிரக்கணக்கான விமானங்களின் சேவை நிறுத்தம்
Ryanair விமான நிறுவனம், அடுத்த ஆண்டு, அதாவது, 2025 ஏப்ரல் முதல் ஜேர்மனிக்கு பல்லாயிரக்கணக்கான விமானங்களின் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சுமார் 10,000 விமானங்களின் சேவை நிறுத்தப்படலாம் என தி டெலிகிராப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
என்ன காரணம்?
ஜேர்மனி, விமான வரி மற்றும் விமான போக்குவரத்துக் கட்டணத்தைக் குறைக்கவேண்டும் என Ryanair விமான நிறுவனம் என கோரியிருந்தது.
ஆனால், ஜேர்மன் அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை. கட்டணங்களைக் குறைக்காவிட்டால் விமான சேவையை பிற நாடுகளுக்கு திருப்பிவிடுவதாக பலமுறை Ryanair விமான நிறுவனம் எச்சரித்தும் ஜேர்மனி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகவே, பல விமான சேவைகள் நிறுத்தப்பட உள்ளதுடன், சில விமான நிலையங்களுக்கான விமான சேவை குறைக்கப்பட இருப்பதாகவும் Ryanair தெரிவித்துள்ளது.
இதனால், சுற்றுலா, பணிகள், நாடுகளுக்கிடையிலான இணைப்பு முதலான பல விடயங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |