ஒரு விமானம் எத்தனை ஆண்டுகள் பயன்பாட்டில் இருக்கும்? பிறகு அதன் நிலை இதுதான்
விமானம் என்பது, நிலையான இறக்கைகளைக் கொண்ட, இயந்திரத்தால் இயக்கப்படும் ஒரு பறக்கும் இயந்திரம்.
ஒரு புதிய போயிங் 737 விமானத்தின் விலை சுமார் $100 மில்லியன் அதாவது ₹800 கோடி வரை இருக்கும்.
ஆனால் விமான நிறுவனங்கள் நேரடியாகக் இதை வாங்காமல், பெரும்பாலும் குத்தகைக்கு வாங்குகின்றன.
ஒரு விமானத்தின் பராமரிப்பு செலவு வருடத்திற்கு சுமார் $3–5 மில்லியன் அதாவது ₹25- 40 கோடி வரை செலவாகும்.
இதில் இயந்திரம் பராமரிப்பு, சோதனைகள், உள்துறை மேம்பாடுகள் மற்றும் விமானிகளின் பயிற்சி செலவுகள் ஆகியவைகளும் அடங்கும்.
விமான நிறுவனங்கள் அதிகமான வருமானத்தை கட்டண பயணிகள், சரக்கு போக்குவரத்து, அதிக கட்டண சேவைகள் மற்றும் விளம்பரங்கள் மூலமாகப் பெறுகின்றன.
இந்நிலையில், மிகப்பெரிய தொழிநுட்ப சாதனமாக கருதப்படும் விமானங்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு அதன் சேவையை நிறுத்துகின்றன.
பொதுவாக, ஒரு விமானத்தின் ஆயுள் 20 முதல் 30 ஆண்டுகள் வரைதான் இருக்கும்.
ஒரு விமானம் பொதுவாக 60,000 முதல் 100,000 பறப்புகள் அல்லது 50,000 பறக்கும் மணிநேரங்கள் வரை பயன்படுகிறது.
இந்த எல்லையை தாண்டும்போது விமானம் அதிக சேவைக்காலம் எனப்படும் நிலையில் சேர்கின்றன.
இதற்குப்பிறகு விமானத்தை பராமரிக்க அதிக செலவாகுவதால் விமானத்தை தூக்கி எரிவது அல்லது பாகங்களை பிரித்தெடுப்பது போன்ற முடிவை நிறுவனங்கள் எடுக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |