இறுகும் இஸ்ரேல் - லெபனான் மோதல்... விமான சேவைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை
லெபனான் மீது இஸ்ரேல் கடந்த 5 நாட்களாக தொடர் தாக்குதலை முன்னெடுத்து வரும் நிலையில், விமான சேவை நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சர்க்கை விடுத்துள்ளது.
முதிர்ச்சியற்ற நடவடிக்கை
லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலில், ஹிஸ்புல்லா தலைவர் Nasrallah கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் ஹிஸ்புல்லா அமைப்பு இதுவரை இதை உறுதி செய்யவில்லை.
இருப்பினும் ஈரான் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதால், நஸ்ரல்லா கொல்லப்பட்ட தகவல் உறுதியானது என்றே நம்பப்படுகிறது. சர்வதேச அழுத்தங்களை புறந்தள்ளி லெபனான் மீது தாக்குதலை தொடரும் இஸ்ரேல் ராணுவத்தின் முதிர்ச்சியற்ற நடவடிக்கை இதுவென்றே ஈரான் பதிலளித்துள்ளது.
அத்துடன், அனைத்து இஸ்லாமிய மக்களும் இஸ்ரேலை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என்றும் ஈரானின் உச்சத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் மிக மோசமான போர் சூழல் உருவாகியுள்ளது.
பயன்படுத்த வேண்டாம்
இந்த நிலையில், வரும் மாதத்தில் லெபனான் மற்றும் இஸ்ரேலிய வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என விமான சேவை நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வான்வழி தாக்குதல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அக்டோபர் 31ம் திகதி வரையில் இந்த இரு நாடுகளின் வான்வெளியை பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |