தரையிறங்கி நகர்ந்த விமானம்... ஊழியர் செய்த கொடுஞ்செயல்: புகைப்படத்துடன் வெளியான தகவல்
அமெரிக்காவில் தரையிறங்கி மெதுவாக நகர்ந்து சென்ற விமானத்தின் இயந்திரத்தில் குதித்து ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தின் இயந்திரத்தில் குதித்து
டெக்சாஸ் மாகாணத்தின் San Antonio சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு குறித்த கோர சம்பவம் நடந்துள்ளது. திருமணமான 27 வயது டேவிட் ரென்னர் என்ற விமான நிலைய ஊழியரே, தரையிறங்கி மெதுவாக நகர்ந்து சென்ற விமானத்தின் இயந்திரத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டவர்.
@facebook
இந்த கோர சம்பவத்தை சக ஊழியர்கள் பலர் நேரில் பார்த்துள்ளனர். பல முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர் இந்த டேவிட் ரென்னர் என கூறுகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக எந்த பிரச்சனையும் இன்றி, குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்க்கை முன்னெடுத்து சென்றுள்ளார் என்றே அவரது சகோதரர் தெரிவித்துள்ளார்.
டேவிட் ரென்னரின் மரணம் தற்கொலை என்றே உடற்கூறு ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், குடும்பத்தினரால் அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். டெல்டா ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான அந்த விமானம் வெள்ளிக்கிழமை இரவு San Antonio சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
@facebook
சக ஊழியர்கள் பலர் முன்னிலையில்
அந்த நேரம், ரென்னர் புறப்பட தயாரான விமானம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், அவரது சக ஊழியர்கள் பலர் முன்னிலையில், டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தின் இயந்திரத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கடந்த 5 மாதங்களாகவே ரென்னர் தமது வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து வந்தார் என கூறும் அவரது சகோதரர், இந்த முடிவு மொத்த குடும்பத்தையும் பாதித்துள்ளது என்றார்.
@ken5
இயக்கத்தில் இருந்த இயந்திரத்தின் முன்பு திட்டமிட்டே சென்று சிக்கிக்கொண்டதாக டேவிட் ரென்னர் தற்கொலை தொடர்பில் விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |