புடினின் போர்நிறுத்தத்தை ஏற்க மறுத்து தாக்குதல்! மாஸ்கோவில் விமான நிலையங்கள் மூடல்
உக்ரைன் ட்ரோன் தாக்குதலினால் ரஷ்யாவின் மாஸ்கோவில் விமான நிலையங்களில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ட்ரோன்கள் இடைமறிப்பு
உக்ரைன் 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களைக் கொண்டு ரஷ்யாவின் தலைநகர் உட்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியது.
ஆனாலும், அவற்றில் பல ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குர்ஸ்க் பகுதியில் ட்ரோன் தாக்குதலால் இருவர் காயமடைந்ததாக உள்ளூர் ஆளுநர் அலெக்சாண்டர் கின்ஷ்டீன் தெரிவித்தார்.
விமான சேவை நிறுத்தம்
இதற்கிடையில், தலைநகர் மாஸ்கோவைச் சுற்றியுள்ள நான்கு விமான நிலையங்களும் தற்காலிகமாக விமான சேவையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப்போரில் வெற்றி தினத்தைக் குறிக்கும் வகையில், மே 8 முதல் 10 வரை மாஸ்கோவில் கொண்டாட்டங்கள் நடைபெற இருப்பதால் 3 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தத்தை புடின் அறிவித்தார்.
அதனை ஜெலென்ஸ்கி ஏற்க மறுத்த நிலையில் இந்த ட்ரோன் தாக்குதல் அரங்கேறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |