ஈரான் மீது குண்டு மழை பொழியும் இஸ்ரேல் - காலவரையறையின்றி மூடப்பட்ட வான்பரப்புகள்
ஈரானிய இராணுவ தளங்கள் மீது இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் தற்போது பல நாடுகள் தங்களது வான்வெளி பயணத்தை தடைசெய்துள்ளனர்.
உலகமே நடுங்கிய பதிலடி
இஸ்ரேல் மீது ஈரான் அக்டோபர் 1 ஆம் திகதி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இன்று காலை ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதேவேளை ஈரானின் இலக்குகளுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையில் தாம் ஈடுபடவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Intense Air Defense Activity including Surface-to-Air Missiles and Anti-Aircraft Guns seen over Tehran, as Israeli Strikes against Iranian Military Targets continue. pic.twitter.com/weNWlKjL87
— OSINTdefender (@sentdefender) October 26, 2024
அண்மையில், இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் பாரிய ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரானிய இலக்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது.
அதில் தெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் காணொளிகள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலிய இராணுவம் இந்த தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சில நாடுகள் தங்களது வான்வெளி பயணங்களையும் நிறுத்தியுள்ளன.
காலவரையறையின்றி மூடிய வான்பரப்புகள்
ஈரானிய இலக்குகள் மீது இஸ்ரேலிய தாக்குதல்களை தீவிரப்படுத்தியதை அடுத்து, ஈரான், சிரியா மற்றும் ஈராக் அனைத்து விமானங்களுக்கும் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன.
வான்வெளியை காலை 9:00 மணிக்கு திறக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஈரான் வான்வெளி மூடுதலை காலவரையின்றி நீடித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |