சூடான் -எகிப்து எல்லையில் குண்டு வீச்சு: 72 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழப்பு
சூடான் -எகிப்து எல்லையில் சுரங்க தொழிலாளர்கள் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுரங்க தொழிலாளர்கள் மீது குண்டு வீச்சு
சூடான் மற்றும் எகிப்து எல்லையில் பார்டர் ட்ரையாங்கிள் என்ற பகுதியில் சுரங்க தொழிலாளர்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 72 சுரங்க தொழிலாளர்கள் வரை உயிரிழந்து இருப்பதாக சூடானின் மனித உரிமை அமைப்பான எமர்ஜென்சி லாயர்ஸ் அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

முதலில் 13 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் சூடான் மருத்துவர்கள் வலையமைப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் தொடர்பாக எந்தவொரு பயங்கரவாத குழுக்களோ அல்லது அரசாங்கமோ இதுவரை பொறுப்பேற்கவில்லை.
ஆனால் இந்த தாக்குதலுக்கு எகிப்து ராணுவம் தான் காரணம் என்று எமர்ஜென்சி லாயர்ஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட விமானங்களும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.