நடிகர் அர்ஜூனின் சம்பந்தி! சந்தோஷத்தில் துள்ளிக்குதிக்கும் தம்பி ராமையா
ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், குணச்சித்திர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் கசிந்தன.
தற்போது இது உண்மையானதே என்பதை உறுதிப்படுத்தியுள்ளார் தம்பி ராமையா.
பட்டத்து யானை படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் ஐஸ்வர்யா அர்ஜூன், அதன்பின் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்ததால் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
தமிழில் சில படங்களில் நடித்திருப்பவர் உமாபதி ராமையா, கடந்தாண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் அர்ஜூன், இதன் மூலம் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டனர்.
Martial arts பற்றி இருவரும் பேசிக்கொள்ள அர்ஜூனி்டம் நல்ல பெயரை எடுத்துள்ளார் உமாபதி.
அதுமட்டுமல்லாது அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களிடம் உமாபதி பழகிய விதமும் அர்ஜூனுக்கு மிகவும் பிடித்துப்போயுள்ளது.
கூடவே ஐஸ்வர்யா அர்ஜூனுடன் பழக்கம் ஏற்பட, இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டனர்.
ஏற்கனவே உமாபதியை பற்றி நல்ல அபிப்ராயம் அர்ஜூனுக்கு இருப்பதாக இருவரது காதலுக்கும் பச்சைக்கொடி காட்டியுள்ளார்.
தொடர்ந்து தம்பி ராமையாவின் குடும்பத்தினரும் மகனின் காதலை ஏற்றுக்கொள்ள விரைவில் திருமணம் நடைபெறவிருக்கிறதாம்.
அர்ஜூன் மற்றும் தம்பி ராமையா படப்பிடிப்புகளில் பிஸியாக இருப்பதால் விரைவில் நிச்சயதார்த்தமும் அதைத் தொடர்ந்து திருமண தேதி குறித்தும் அறிவிக்க இருக்கிறார்களாம்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |