ஐயனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்பவர்களுக்கு உதவும் புதிய App..!
Kerala
India
By Kirthiga
கேரளாவில் உள்ள சபரிமலை அய்யனை காண்பதற்காக செல்லவிருக்கும் பக்தர்களுக்கு உதவும் விதமாக ஒரு செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய செயலி
கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16 ஆம் திகதி நடை திறக்கப்பட்டது. இதற்கு உதவுவதற்காக கேரள வனத்துறை ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
- அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவுகள், தங்குமிடம், பொதுக் கழிப்பறைகள், எருமேலி, பம்பா, சன்னிதானம், சிறுவழி, புல்மேடு ஒவ்வொரு வழித்தடத்திலும் இருந்தும் சன்னிதானம் வரையிலான தூரம் மற்றும் இலவசமா குடிநீர் விநியோகிக்கப்படும் இடங்கள் என்பவற்றை இலகுவாக தெரிந்துக்கொள்ள முடியும்.
- மேலும் இதை GooglePlay Store இல் இதை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.
- தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளில் இதை பயன்படுத்தலாம்.
- வழிப்பாதையில் உள்ள QR கோடினை Scan செய்வதன் மூலமும் இதை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும்.
- இந்த செயலியை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் மூலம் பயன்படுத்தலாம்.
- கோயில் நடை திறக்கும் நேரம், பக்தர்கள் அனுமதிக்கப்படும் நேரங்களையும் அறிந்துக்கொள்ளலாம்.
மேலும் பல்வேறு நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஜயனை காண வருகை தருகிறார்கள். ஆகவே அவர்களுக்கு உதவும் முகமாக இந்த நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US