இவரெல்லாம் ரொம்ப எதிர்பார்க்காதீங்க- ரஹானேவை விமர்சித்த சஞ்சய் மஞ்சரேக்கர்
உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் ரஹானே சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கவில்லை என்று கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் தெரிவித்திருக்கிறார்.
ரஹானேவை விமர்சித்த சஞ்சய் மஞ்சரேக்கர்
வரும் 7ம் தேதி உலக டெஸ்ட் இறுதிப்போட்டியில் இந்தியா அணியும், ஆஸ்திரேலியா அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன. இவர் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதனையடுத்து உள்ளூர் போட்டியில் நன்றாக விளையாடி 600 ஓட்டங்கள் சேர்த்ததால், 18 மாதங்களுக்குப் பிறகு இந்த இறுதிப் போட்டிக்கு ரஹானே இடம்பெற்றுள்ளார்.
இந்த வாய்ப்பை ரஹானே சிறப்பாக பயன்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில், ரஹானே குறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் பேசுகையில், இந்தப் போட்டியில் ரஹானேவிற்கு பெருசா அழுத்தம் இருக்காது. ஏற்கெனவே, அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டவர். ஓய்வு பெற்று விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது தான் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
நானும் அணியிலிருந்து நீக்கப்பட்டவன்தான். பிறகு, பல பல உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினேன். அதெல்லாம் பெரிய நம்பிக்கை கொடுக்காது.
இந்த இறுதிப் போட்டியில் ரஹானேவை வித்தியாசமாக நாம் பார்க்கப்போறோம், அவர் சிறப்பாக விளையாடினால் நல்லது. ஆனால், அவர் மீது பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்லை. ரோகித் சர்மா, புஜாரா, விராட் கோலி மீது தான் எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்றார்.