அம்மாவின் அன்பிற்கு ஈடு இணை உண்டோ? கபடி வீரருக்கு Video Callல் திருஷ்டி சுற்றும் தாய்
ப்ரோ கபடி தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வரும் அஜித்திற்கு அவரது தாய் Video Callல் திருஷ்டி கழித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளுக்கு அடுத்து ப்ரோ கபடி தொடருக்கு இந்தியாவில் மவுசு அதிகம், கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட போட்டிகள் கடந்தாண்டு டிசம்பர் முதல் தொடங்கி நடந்து வருகிறது.
பார்வையாளர்கள் அனுமதியின்றி பெங்களூருவில் உள்ள மைதானத்தில் அனைத்து போட்டிகளும் நடந்து வருகிறது.
இதில் யூ மும்பை அணியில் தமிழகத்தை சேர்ந்த அஜித் விளையாடி வருகிறார், இவரது பெற்றோர்கள் கூலி வேலை செய்பவர்கள்.
தன்னுடைய தந்தையின் கனவை நிறைவேற்றும் முயற்சியில் கடுமையாக போராடி வருகிறார் அஜித்.
இந்நிலையில் காயம் காரணமாக கடந்த போட்டியில் அஜித்தால் விளையாட முடியாமல் போக, தாயுடன் Video Callல் பேசுகிறார்.
அந்த Video Callலேயே மகனுக்காக பாசத்துடன் திருஷ்டி கழிக்கிறார் அவரது தாய், இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.
Ajith has a message for his Amma, and for you, too. 💬🧿#UMumba | #MeMumba | #Mumboys | #WeAreMumba | #WeAreMumbai | #vivoProKabaddi pic.twitter.com/QfLw9z4Fzm
— U Mumba (@umumba) January 13, 2022

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.