அஜித்குமார் மரணம்: பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி
கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரேத பரிசோதனை அறிக்கை
தமிழக மாவட்டமான சிவகங்கை, மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தவர் அஜித்குமார். இவரை நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக பொலிஸார் அழைத்துச் சென்றிருந்தனர்.
ஆனால், அஜித் குமார் தனிப்படை பொலிஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை விசாரித்து வரும் மதுரை மாவட்ட 4-வது கோர்ட்டின் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் வரும் 8-ம் திகதி அன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.
இந்நிலையில், அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், "அஜித் குமாரின் உடலில் இருந்த 50 வெளிப்புற காயங்களில்12 சிராய்ப்பு காயங்கள், மீதி ரத்தக்கட்டு காயங்களாக இருந்துள்ளன.
வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயம், மண்டை ஓட்டின் இரு பக்கங்கள், நடுமண்டை, தலைப்பகுதி முழுவதுமாக கட்டையால் அடித்த காயம் ஆகியவற்றுடன் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.
மேலும், சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டுள்ளது. இடது கையில் 3 இடங்களில் சிகரெட் சூடு வைக்கப்பட்டுள்ளது. காதுகளில் ரத்தக்கசிவு, இதயத்தில் இரு இடங்கள் மற்றும் கல்லீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |