நடிகர் அஜித் புகைப்படத்தை பதிவிட்டு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துக்கள்
பிரபல திரைப்பட நடிகரான அஜித்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.
தமிழ் திரையுலகில் திரைப்படத்தையும் தாண்டி, தனக்கென்று பல திறமைகளை வளர்த்து வருபவர் தான் அஜித்குமார்.
ஆரம்பத்தில், கார் ரேஸிங், பைக் ரேசிங் என இருந்த இவர், அதில் ஏற்பட்ட விபத்து காரணமாக அதில் இருந்து சற்று விலகினார்.
இருப்பினும், தன்னுடைய படங்களில் ஏதேனும் ஒரு கார் ரேசிங் அல்லது பைக் ரேசிங்கில் நடித்திருப்பார். அப்படி தனக்குள் இருக்கும் திறமைகளை வெளி கொண்டு வரும் நடிகர் அஜித் சமீபத்தில், துப்பாக்கிச் சூடும் போட்டியில் தங்கம் வென்றார்.
கடந்த மார்ச் 2-ஆம் திகதி முதல் 7-ஆம் திகதி வரை 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியை சென்னை ரைபிள் கிளப்பின் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் இந்தப் போட்டிகளை நடத்தினார்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து சுமார் 900-க்கும் மேற்பட்டோர் இந்தப் போட்டியில் பங்கேற்றார்கள். 60-க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பல்வேறு துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் நடைபெற்றன.
தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள்! pic.twitter.com/ZPfbY08uzJ
— O Panneerselvam (@OfficeOfOPS) March 8, 2021
சென்னை ரைபிள் கிளப், மதுரை ரைபிள் கிளப், கோயம்புத்தூர் ரைபிள் கிளப் உட்பட 52 கிளப்கள் இந்தப் போட்டிகளில் பங்கெடுத்தன.
இதில் சென்னை ரைபிள் கிளப் அணி பல்வேறு பதக்கங்களைக் குவித்தது. சென்னை ரைபிள் கிளப்பின் உறுப்பினரான நடிகர் அஜித் அவர்கள் 6 பதக்கங்களை வென்றார்.
அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகின, இதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், தனது அயராத உழைப்பாலும் தன்னம்பிக்கையாலும் திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளில் சாதித்துவரும் அன்புச்சகோதரர் திரு.அஜீத்குமார் அவர்கள் சென்னையில் நடைபெற்ற 46வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றிருப்பதில் மகிழ்ச்சி. அவருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.