ரூ.15 கோடிக்கு குண்டு துளைக்காத கார்: Mercedes-Benz S680 சொந்தமாக்கிய ஆகாஷ் அம்பானி
ஆகாஷ் அம்பானி தனது சொகுசு கார் சேகரிப்பில் புதிதாக துப்பாக்கி குண்டு துளைக்காத மெர்சிடிஸ்-பென்ஸ் காரை சேர்த்துள்ளார்.
ஆகாஷ் அம்பானியின் Mercedes-Benz S680
இந்தியாவின் பணக்கார குடும்பத்தை சேர்ந்த மற்றும் ரிலையன்ஸ் நிறுவன பேரரசின் மூத்த வாரிசான ஆகாஷ் அம்பானி சமீபத்தில் மெர்சிடிஸ்-பென்ஸ் S680(Mercedes-Benz S680) கார்டை வாங்கியுள்ளார்.
வாகன பாதுகாப்பின் உச்சமாக கருத்தப்படும் ஆர்மர் செய்யப்பட்ட இந்த வாகனம் VR10-மட்ட பாதுகாப்பை கொண்டுள்ளது.
அதிகபட்ச பாதுகாப்பை தேடுபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட இந்த மெர்சிடிஸ்-பென்ஸ் S680 கார்டு(S680 Guard), உலகத் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களால் விரும்பப்படுகிறது.
இது வலுவான பாதுகாப்பைத் தவிர, S680 Guard தனது உயர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு ஒரு சொகுசான உட்புறத்தையும் பயணத்தையும் வழங்குகிறது.
இந்த அளவிலான பாதுகாப்பு மற்றும் செழுமையை வழங்கும் Mercedes-Benz S680 காரானது சுமார் ரூ.15 கோடியாகும்.
ஆகாஷ் அம்பானியின் கார் சேகரிப்பு
ஆகாஷ் அம்பானியின் கார் சேகரிப்பு அவரது தேர்ந்தெடுக்கும் சுவை மற்றும் வாகன சிறப்பைப் பாராட்டுவதற்கான சான்றாகும்.
அவரது கேரேஜில் பல்வேறு உயர் செயல்திறன் கொண்ட வாகனங்கள் உள்ளன, அவற்றில் முக்கியமாக Lamborghini Urus, Bentley Bentayga, Range Rover Vogue, Rolls-Royce Phantom Drophead Coupé மற்றும் BMW 5-Series ஆகியவை அடங்கும்.
இந்த அனைத்து கார்களும் மும்பையில் உள்ள ஆன்டிலியா-வில்(Antilia) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் பிரம்மாண்டமான தனியார் வீடுகளில் ஒன்றாக கருதப்படும் ஆன்டிலியா, ஹெலிபேடுகள், 50 இருக்கைகள் கொண்ட தியேட்டர், பனி அறை மற்றும் 168 கார்கள் நிறுத்தக்கூடிய கேரேஜ் உள்ளிட்ட ஏராளமான வசதிகளைக் கொண்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |
Akash Ambani Car Collection, Akash Ambani Cars, Mercedes-Benz S680 Guard, Akash Ambani Mercedes, Bulletproof Car India, Luxury Cars India, Most Expensive Cars in India, Akash Ambani Lifestyle, Antilia Mumbai, Richest Man in India Cars,
Akash Ambani S680 Guard, VR10 Level Protection Car,Mercedes-Benz S680 Guard Price,Akash Ambani Rolls-Royce,Lamborghini Urus Akash Ambani,Bentley Bentayga Akash Ambani,Range Rover Vogue Akash Ambani,BMW 5 Series Akash Ambani,Rolls-Royce Phantom Drophead Coupé,Antilia Car Garage,