நைட் வாட்ச்மேனாக வந்து முதல் அரைசதம்! இங்கிலாந்தை அலறவிட்ட ஆகாஷ் தீப்
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆகாஷ் தீப் அரைசதம் விளாசினார்.
ஆகாஷ் தீப்
லண்டன் ஓவலில் நடந்து வரும் கடைசி டெஸ்டில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.
கே.எல்.ராகுல் 7 ஓட்டங்களிலும், சாய் சுதர்சன் 11 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் (Akash Deep) நைட் வாட்ச்மேனாக களமிறங்கினார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஆகாஷ் தீப் தனது முதல் சர்வதேச அரைசதத்தை பதிவு செய்தார்.
107 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப்
அவரது விக்கெட்டை கைப்பற்ற இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் போராடிய நிலையில், ஓவர்டன் 43வது ஓவரில் அவுட் செய்தார்.
அணியின் ஸ்கோர் 177 ஆக இருந்தபோது, கஸ் அட்கின்சனிடம் கேட்ச் கொடுத்து ஆகாஷ் தீப் பெவிலியன் திரும்பினார்.
அவர் 94 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்கள் குவித்தார். ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து அவர் 107 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |