ஆசியக் கிண்ணத்திலும் பும்ரா இல்லையா? வெளியான தகவல்
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஆசியக் கிண்ணத் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.
ஆனால் முன்னதாகவே 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள ஆசியக் கிண்ண டி20 தொடரிலும் ஜஸ்பிரித் பும்ரா (Jaspirit Bumrah) விளையாட மாட்டார் என்று கூறப்படுகிறது.
ஏனெனில், ஆசியக் கிண்ண டி20 தொடர் முடிந்து ஒரு வாரத்திலேயே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.
இதன் காரணமாக டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்த பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |