ஆயுஷ் மாத்ரேவிற்கு மாற்றாக CSK அணியில் இணையும் ஆகாஷ் மத்வால்
ஆயுஷ் மாத்ரேவிற்கு மாற்றாக ஆகாஷ் மத்வாலை CSK அணி ஒப்பந்தம் செய்துள்ளது.
CSK அணியில் இணையும் ஆகாஷ் மத்வால்
சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஆயுஷ் மாத்ரே, SRH அணிக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டம் செய்தபோது தொடை தசைநாரில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவருக்கு மாற்று வீரராக ஆகாஷ் மத்வாலை, CSK அணி ரூ.30 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.
Official Announcement
— Chennai Super Kings (@ChennaiIPL) April 23, 2026
Speed incoming!! ⚡️
Akash Madhwal is now #Yellove 💛
Note: Akash Madhwal replaces Ayush Mhatre, who has been ruled out due to hamstring injury.#WhistlePodu pic.twitter.com/tSgnZupmZb
வலது கை வேகப்பந்து வீச்சாளரான மத்வால், இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ்(2023, 2024) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (2025) அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
17 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி, 23 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில், MI அணிக்காக விளையாடிய போது, 3.3 ஓவர்கள் வீசி 5 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.

டெத் ஓவர்களில் துல்லியமான யார்க்கர் வீசும் திறமை உள்ளவராக கருதப்படுகிறார்.
32 வயதான, உத்தரகாண்ட்டை சேர்ந்த ஆகாஷ் மத்வால். ரிஷப் பந்தின் நெருங்கிய அண்டை வீட்டாராக அறியப்படுகிறார்.
மேலும், ஐபிஎல் தொடரில் விளையாடிய முதல் உத்தரகாண்ட் சார்ந்த உள்ளூர் கிரிக்கெட் வீரர் ஆனார்.

இன்றைய CSK மற்றும் MI அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஆயுஷ் மாத்ரேக்கு பதிலாக உர்வில் படேல் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |