இவர்களை உடனடியாக ஒழித்துக்கட்ட வேண்டும்! தலிபான் தளபதிகளுக்கு உச்ச தலைவர் உத்தரவு
தலிபான் படைகளில் ஊடுருவி உள்ளவர்கள் ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக செயல்படக்கூடும் என்று தலிபான் உச்ச தலைவர் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா எச்சரித்துள்ளார்.
தலிபான் உச்ச தலைவர் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா வெளியிட்ட அறிக்கையில், தலிபான் தளபதிகள் தங்கள் படைகளில் ஊடுருவி உள்ளவர்களை கண்டறிந்து ஒழிக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு படையிலும் உள்ள மூத்த தளபதிகள், படையில் இருக்கும் வீரர்கள் குறித்த விவரங்களை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
படைக்குள் அரசாங்கத்தின் விருப்பத்திற்கு எதிராக குழு ஏதேனும் செயல்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும், அவ்வாறான என்னத்தோடு இருப்பவர்கள் அனைவரும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.
மேலும், எந்த தவறு நடந்தாலும், அதானல் ஏற்படும் விளைவுகளுக்கு மூத்த உறுப்பினர்களே பொறுப்பேற்க வேண்டும் என அகுன்ஜதா எச்சரித்துள்ளார்.
தலிபான் தளபதிகள் தங்களுக்கு கீழ் இருக்கும் படை வீரர்களுடன் அமர்ந்து நேரத்தை ஒதுக்கி, அவர்களுக்கு ஏற்ப செயல்பட முயற்சிக்க வேண்டும்.
இதனால் முஜாஹிதீன்கள் அவரது தலைவருக்கு சிறப்பாக செயல்பட முடியும் என்று தலிபான் உச்ச தலைவர் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை பிடித்தும் பல நாட்களாக பொதுவெளியில் தோன்றாமல் இருந்த தலிபான் உச்ச தலைவர் ஹெய்பத்துல்லாஹ் அகுன்ஜதா, சமீபத்தில் காந்தஹார் மாகாணத்தில் உள்ள ஒரு மதரசா பள்ளிக்கூடத்துக்கு சென்று, அங்கு தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றியதாக தலிபான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.