கவனத்தை ஈர்த்த அக்ஷதா மூர்த்தியின் நெக்லஸ்! அப்படி என்ன ஸ்பெஷல்?
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடிய புகைப்படம் வைரலான நிலையில், அக்ஷதா மூர்த்தி அணிந்திருந்த நெக்லஸ் அதையும் தாண்டி கவனத்தை ஈர்த்துள்ளது.
ரிஷி சுனக் & அக்ஷதா மூர்த்தி
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் அக்ஷதா மூர்த்தி ஆகிய இருவரும் கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் என்பது சில காலங்களிலே நாம் புரிந்து கொண்டோம். அதாவது, அவர் பதிவியேற்ற நாள்களில் இருந்து, அவருடைய வீட்டிற்கு வரும் விருந்தினர்களை வைத்தே புரிந்து கொள்ள முடிகிறது.
அதுமட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள கோயில்களுக்கும் இவர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அதிகாரப்பூர்வ இல்லமான 10 டவுனிங் தெருவில் அவரும், அவரது குடும்பத்தினரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர்.
அப்போது, அக்ஷதா மூர்த்தி மற்றும் அவரது இரு மகள்களும் இந்திய உடையில் தீபத்தை ஏற்றி கொண்டாடினர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
அக்ஷதா மூர்த்தி நெக்லஸ்
இங்கிலாந்தின் முதல் பெண்மணியான அக்ஷதா மூர்த்தி நீல நிற மைசூரு பட்டுபுடவை அணிந்ததுடன், கந்தபெருண்டா நெக்லஸ் -யும் அணிந்திருந்தார். இதில் கந்தபெருண்டா அல்லது பேருண்டா என்பது இந்து புராணங்களில் இரண்டு தலை கொண்ட பறவையாகவும், விஷ்ணுவின் வடிவமாகவும் கருதப்படுகிறது.
இந்த கந்தபெருண்டாவை, அக்ஷதா மூர்த்தியின் சொந்த மாநிலமான கர்நாடகாவில் ஆண்ட பல அரசுகளின் சின்னமாக பயன்படுத்தப்பட்டன. தற்போதும், இது கர்நாடகாவில் சின்னமாக இருந்து வருகிறது.
இதனால், கர்நாடகாவின் பெருமை தற்போது பிரிட்டன் அதிகாரத்தில் உச்சத்தில் இருக்கிறது என்று பலரும் கூறி வருகின்றனர்.
இந்த தீபாவளி கொண்டாட்டத்தின் போது, இவர்களுடன் இந்திய அமைச்சர் ஜெய் சங்கர் மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டார். அப்போது, விராட் கோலி கையெழுத்திட்ட பேட் மற்றும் விநாயகர் சிலை ஆகியவற்றைப் பரிசாக அவர்களுக்கு அளித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |