கமல்ஹாசனுக்காக வாக்கு சேகரித்த அக்ஷரா ஹாசன், சுகாசினி! குத்தாட்டம் போட்டு மக்களை ஈர்ப்பு! வைரல் வீடியோ
கமல் ஹாசனுக்காக வாக்கு சேகரிக்கச் சென்ற அக்ஷரா ஹாசன் மற்றும் சுகாசினி இருவரும் மக்களுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் திகதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கிடையில் ஒரு நாள் மட்டுமே உள்ளநிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் அவரர் தொகுதிகளில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வரும் நிலையில், மக்கள் நிதி மையத்தின் தலைவர் கமல் ஹாசன் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார்.
MNM star campaigners Ms. Suhasini Maniratnam and Ms. Akshara Haasan receive overwhelming support from the people of Amman kulam and Ma. Na. Ka. Street.
— meenakshisundaram (@meenakshinews) April 4, 2021
Photos of their campaign for MNM party President Mr. Kamal Haasan at Coimbatore south: @Iaksharahaasan @ikamalhaasan pic.twitter.com/OrvysBHMjI
அவருக்கு ஆதரவாக, அவரது மகள் அக்ஷரா ஹாசன் மற்றும் சகோதரி சுகாசினி மணிரத்னம் ஆகியோர், கமல் ஹாசன் வேட்பாளராக நிற்கும் கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அம்மன் குளம் பகுதியில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தபோது, அக்ஷரா ஹாசன் மற்றும் சுகாசினி இருவரும் மேள தாளத்துக்கு செம குத்தாட்டம் போட்டு மக்களைக் கவர்ந்துள்ளனர்.
MNM star campaigners #SuhasiniManiratnam and #AksharaHaasan receive overwhelming support from the people of Amman kulam and Ma. Na. Ka. Street. #TNElection2021 @maiamofficial @hasinimani @Iaksharahaasan @idiamondbabu @shrutihaasan @ikamalhaasan @sripriya @DiehardKamalian pic.twitter.com/oLgMZxjuN1
— Filmi Street (@filmistreet) April 4, 2021
அவர்களுடன் சேர்ந்து அங்குள்ள மக்களும் ஒரு குத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவிவருகிறது.
MNM star campaigners Ms. Suhasini Maniratnam and Ms. Akshara Haasan receive overwhelming support from the people of Amman kulam and Ma. Na. Ka. Street.
— Diamond Babu (@idiamondbabu) April 4, 2021
Photos of their campaign for MNM party President Mr. Kamal Haasan at Coimbatore south: pic.twitter.com/4I1aMzv9Mr