நட்சத்திர வீரருக்கு ரெட்! ரொனால்டோ கோல் அடிக்காமலேயே அல் நஸர் த்ரில் வெற்றி
கிங் கோப்பை சாம்பியன்ஷிப் தொடரில் ரொனால்டோவின் அல் நஸர் அணி 1-0 என்ற கணக்கில் அல் எட்டிஃபாக் அணியை வீழ்த்தியது.
தலிஸ்காவுக்கு ரெட்
அல் அவ்வால் பார்க் மைதானத்தில் நடந்த கிங் கோப்பை போட்டியில் அல் நஸர் மற்றும் அல் எட்டிஃபாக் அணிகள் மோதின.
முதல் பாதியின் 45+11வது நிமிடத்தில் அல் நஸரின் நட்சத்திர வீரர் தலிஸ்காவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
Twitter (@AlNassrFC_EN)
கோல் விழாத நிலையில் தலிஸ்கா வெளியேறியது அல் நஸருக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. அதன் விளைவாக இரண்டாம் பாதியில் கோல் அடிக்க ரொனால்டோவின் அணி போராடியது.
சாடியோ மானே வெற்றி கோல்
ஆட்டத்தின் 89வது நிமிடத்தில் அல் எட்டிஃபாக் அணியின் அலி ஹசாஸி ரெட் கார்டு பெற்று வெளியேறினார். இரு அணிகளின் பக்கமும் கோல் விழாத நிலையில் கூடுதல் நேரத்தில் (107வது நிமிடம்) சாடியோ மானே அடித்த கோல் அல் நஸரின் வெற்றி கோலாக அமைந்தது.
Twitter (@AlNassrFC_EN)
இதன்மூலம் அல் நஸர் அணி கிங் கோப்பை சாம்பியன்ஷிப் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
Twitter (@AlNassrFC_EN)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |