ரொனால்டோவை முதல் போட்டியிலேயே திணறடித்த எட்டிஃபாக்: வீடியோ காட்சிகள்
சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் முதல் முறையாக களமிறங்கிய நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ எட்டிஃபாக் அணி வீரர்களின் சிறப்பான தடுப்பாட்டத்தால் கோல் அடிக்க முடியாமல் திணறினார்.
அல் நஸர் அணியில் ரொனால்டோ
பிரபல கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிளவு பிறகு, தனது 173 மில்லியன் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்துடன் சவுதி அரேபியாவின் அல் நஸர் கிளப்பில் இணைந்தார்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை சவுதி ப்ரோ லீக் கால்பந்து போட்டியில் அல்-எட்டிஃபாக் அணிக்கு எதிரான போட்டியில் தனது புதிய கிளப்பான அல் நாசர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது முதல் போட்டியில் களமிறங்கினார்.
This atmosphere ??#RoshnSaudiLeague | @AlNassrFC_EN | @Ettifaq_EN pic.twitter.com/sVLEQppAjY
— Roshn Saudi League (@SPL_EN) January 22, 2023
அத்துடன் இந்த போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நாசர் அணியின் கேப்டனாகவும் களமிறக்கப்பட்டார்.
மைதானத்தில் திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களும் ரொனால்டோ என்ற ஒற்றை வீரரை உற்று நோக்கி அவரது கோலுக்காக காத்து இருந்தனர்.
ஆனால் ரொனால்டோவின் தாக்குதல் ஆட்டத்தை எதிர்கொள்ள எட்டிஃபாக் சிறிதும் தயங்கவில்லை, ரொனால்டோவின் சவாலை அவர்கள் துணிச்சலாக எதிர்கொண்டனர்.
Talisca heads home Al Nassr's opener ⚽️
— Roshn Saudi League (@SPL_EN) January 22, 2023
The cross, just, evaded Ronaldo's leap ?#RoshnSaudiLeague | @AlNassrFC_EN | @Ettifaq_EN pic.twitter.com/SbCYaLNN1C
ஆட்டத்தின் 31 வது நிமிடத்தில் பிரேசிலின் முன்கள வீரர் ஆண்டர்சன் தலிஸ்கா அடித்த முதல் கோல் மட்டுமே அல் நஸர் அணியை இறுதியில் வெற்றி கொண்டு சென்றது.
ரொனால்டோவை திணற வைத்த எட்டிஃபாக்
ஆட்டத்தின் முதல் பாதியில் 9 நிமிடங்கள் மீதம் இருந்த நிலையில் ரொனால்டோவுக்கு கோல் அடிக்கும் ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அதற்கு இடையூறாக இருந்த அல்-எட்டிஃபாக் அணி வீரர்கள் ரொனால்டோவை கோல் அடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.
எட்டிஃபாக் அணியின் கோல் கம்பம் அருகே கிடைத்த ஃப்ரீ கிக் வாய்ப்பை ரொனால்டோ கோலாக்குவார் என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவரோ கோல் கம்பத்திற்கு மேலே பந்தை அடித்து வாய்ப்பை வீணடித்து விட்டார்.
அதே போல இரண்டாம் பாதியிலும் அல் நஸர் அணி கோல் அடிக்க சிறப்பான இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன ஆனால் அதனை அல் நஸர் அணி வீரர்கள் தவறவிட்டனர்.
Ronaldo from the free kick and he misses pic.twitter.com/7ww86rO1pe
— Mr Matthew AFC (@MrMatthewAFXXX) January 22, 2023
ரொனால்டோ தனது திறமையான ஆட்டத்தால் புத்திசாலித்தனமாக உருவாக்கிக் கொடுத்த வாய்ப்பை கோலாக்க அல் நஸர் அணியின் சக வீரர்கள் தவறிவிட்டனர்.
ஆட்டத்தின் இறுதி நொடி வரை ரொனால்டோவை சுற்றி வளைத்து கோல் அடிக்க விடாமல் தடுக்கும் யுத்தியை அல்-எட்டிஃபாக் அணி வீரர்கள் சிறப்பாக செய்தனர்.
ஆட்டத்தின் இறுதியில் ஆண்டர்சன் தலிஸ்கா அடித்த முதல் கோல் மட்டுமே அல் நஸர் அணிக்க இறுதியில் வெற்றி கொண்டு வந்து கொடுத்தது மற்றும் சவுதி ப்ரோ லீக் போட்டியில் அட்டவணையில் முதலிடத்தையும் பிடித்தது. ஜாம்பவான் வீரரான ரொனால்டோ ஆட்டத்தின் எந்தவொரு கட்டத்திலும் மாயாஜாலம் காட்டியவர் என்று காத்து இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமாக முடிந்தது.
GETTY IMAGES
ரொனால்டோ இந்த போட்டியில் கோல் அடிக்க முடியாமல் போனதற்கு அல்-எட்டிஃபாக் அணி வீரர்களின் சிறப்பான தடுப்பு ஆட்டமே காரணமாக பார்க்கப்படுகிறது.
எட்டிஃபாக் அணியைப் பொருத்தவரை, கோல் கீப்பர் பவுலோ விக்டர் ஹீரோவாக ஜொலித்தார்.