அல்-கொய்தா அமைப்பால் கடத்தப்பட்ட அவுஸ்திரேலிய மருத்துவர்: 7 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிப்பு
மேற்கு ஆப்பிரிக்காவில் அல்-கொய்தா தீவிரவாதிகளால் சிறை வைக்கப்பட்டு இருந்த 88 வயதுடைய அவுஸ்திரேலிய மருத்துவர் கென்னத் எலியட் (Kenneth Elliott) 7 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிறைபிடிக்கப்பட்ட அவுஸ்திரேலிய மருத்துவர்
கடந்த 2016ம் ஆண்டு ஆப்பிரிக்காவில் மாலி மற்றும் புர்கினா பாசோ நகரின் இடையே உள்ள எல்லைக்கு அருகே அவுஸ்திரேலியாவை சேர்ந்த மருத்துவர் கென்னத் எலியட் மற்றும் அவரது மனைவி ஜோஸ்லின்(Jocelyn) ஆகிய இருவரையும் அல்-கொய்தா தீவிரவாதிகள் சிறைப்பிடித்தனர்.
இந்த அவுஸ்திரேலியா தம்பதி கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக அங்கு மருத்துவ கிளினிக் வைத்து நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
Rebekah Ziesmer Strand/Facebook
இதற்கிடையில் அவுஸ்திரேலிய மருத்துவ தம்பதி சிறைபிடிக்கப்பட்டதற்கு எதிராக அப்போது மக்களின் அழுத்தம் ஒருப்பக்கம் அதிகரித்தது, மறுபக்கம் போரில் பெண்களை உட்படுத்தக் கூடாது என்று சம்பந்தப்பட்ட தீவிரவாத அமைப்பின் தலைவர் வழங்கிய கோட்பாடுகளின் அடிப்படையில் மருத்துவர் கென்னத் எலியட்டின் மனைவி ஜோஸ்லின் 3 வாரங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்.
AFP/Getty Images
7 ஆண்டுகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ள மருத்துவர்
இந்நிலையில் கடத்தப்பட்டு கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், 88 வயதான மருத்துவர் கென்னத் எலியட்-ஐ அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு விடுவித்துள்ளது.
இது தொடர்பாக அவுஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்த கருத்தில், மருத்துவர் கென்னத் எலியட் தற்போது பாதுகாப்பாக, நல்ல நிலைமையுடன் இருப்பதாகவும், மீண்டும் அவரது குடும்பத்துடன் இணைந்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Djibo soutient Dr Ken Elliott/Facebook