இரட்டை வாழ்க்கை வாழ்ந்த பெண்... அடித்துக் கொன்றுவிட்டு நாடகம் போட்ட கணவன்: சிக்கியது எப்படி?
அமெரிக்காவில், வீட்டில் இல்லத்தரசியாகவும் இணையத்தில் ஆபாச போஸ் கொடுத்து சம்பாதிக்கும் பெண்ணாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெண்ணை கொலை செய்ததாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Kathleen Dawn West (42), இணையத்தில் உள்ளாடைகளுடன் போஸ் கொடுக்கும் ஒரு பெண்.
அவரது நிர்வாண படங்களை காண விரும்புவோர் அவருக்கு 15.99 டொலர்கள் கட்டணம் செலுத்தவேண்டும். ஆனால், வெளி உலகைப் பொருத்தவரை அவர் ஒரு இல்லத்தரசியாக வாழ்ந்துவந்துள்ளார்.
அலபாமாவில் ஒரு நாள் வீட்டுக்கு வெளியே சாலையில் இறந்துகிடந்தார் Kathleen. அவரது தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
அவரை அடித்துக் கொல்ல பயன்படுத்தப்பட்ட மதுபான போத்தலை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். அந்த போத்தலை, தம்பதி ஜோடியாக சென்று வாங்கும் காட்சிகள் கடை ஒன்றிலிருந்த கமெராவில் பதிவாகியும் உள்ளன.
அந்த போத்தலில் Kathleenஇன் கணவரான William Jeffrey West(47)உடைய கைரேகைகள் பதிவாகியுள்ளதுடன், அவை அவர் அந்த போத்தலை பிடித்து அடித்தால் எப்படி பதிவாகியிருக்குமோ, அதாவது, அந்த போத்தலின் கழுத்துப் பகுதியில் Williamஉடைய கைரேகை தலைகீழாக பதிவாகியுள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும், சம்பவம் நடந்தபோது, தான் தூங்கிக்கொண்டிருந்ததாக விசாரணையில் William கூறியிருந்த நிலையில், அவரது கையில் கட்டியிருந்த கைக்கடிகாரத்தில் இருந்த ஆப் ஒன்று, அவர் 18 அடி தூரம் நடந்து சென்றதைக் காட்டியது.
ஆகவே, Williamதான் Kathleenஐ கொலை செய்தார் என்ற முடிவுக்கு பொலிசார் வந்துள்ளார்கள்.
மனைவியின் இரட்டை வாழ்க்கை காரணமாக எரிச்சலுற்று அவர் Kathleenஐ கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். ஆகவே, Williamக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



