கொலை வழக்கில் கைதான தாய், மகள்! மரணதண்டனை எதிர்கொள்ளும் பெண்
அமெரிக்காவில் பெண்ணொருவர் குன்றில் இருந்து தள்ளி கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட மற்றொரு பெண் மரண தண்டனையை எதிர்கொள்ள வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.
குன்றின் மேல் இருந்து
அலபாமாவைச் சேர்ந்த மேரி எலிசபெத் இஸபெல் (38) என்ற பெண் 2021ஆம் ஆண்டில் காணாமல் போனார்.
அதன் பின்னர் இரண்டு ஆண்டுகள் கழித்து அவரது உடல் பாகங்களின் எச்சங்கள் Liver River Canyon ரிசர்வ் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் 2021ஆம் ஆண்டு அக்டோபரில் ஒரு குன்றின் மேல் இருந்து தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
மரணதண்டனை
Loretta Kay Carr என்ற பெண் இஸபெல்லை கடத்திச் சென்று குன்றிலிருந்து தள்ளியதாக குற்றம்சாட்டப்பட்டார். மேலும், அவரது மகள் ஜெஸ்ஸி கெல்லி (22) மீதும் கடந்த ஆண்டு சூன் மாதம் கொலை குற்றம் சாட்டப்பட்டது.
இஸபெல்லின் வீட்டில் கிடைத்த ஆதாரங்களின்படி தாய், மகள் இருவரும் கைது செய்யப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பில் Carr மரண தண்டனையை எதிர்கொள்வார் என வழக்கறிஞர்கள் கூறியுள்ளார். ஆனால், அவரது மகளுக்கும் அதே தண்டனை கோரப்படுமா என்பது குறித்து அவர்கள் வெளிப்படுத்தவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |