உலகக்கிண்ணத்தில் 7 விக்கெட் வீழ்த்திய முதல் வீராங்கனை! 97 ஓட்டங்களில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா
அவுஸ்திரேலியாவிற்கு எதிரான மகளிர் உலகக்கிண்ணப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 97 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அலானா கிங்
தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டி இண்டூரில் நடந்தது.
𝐀𝐥𝐚𝐧𝐚 𝐊𝐢𝐧𝐠 🔥👑
— Female Cricket (@imfemalecricket) October 25, 2025
Best bowling figures in Women’s World Cup ✅
Best ODI figures for Australia ✅#CricketTwitter #CWC25 #AUSvSApic.twitter.com/M3Vdtx3BHy
முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அலானா கிங்கின் (Alana King) மாயாஜால சூழலில் சிக்கி 97 ஓட்டங்களுக்கு சுருண்டது.
அதிகபட்சமாக லௌரா வோல்வார்ட் 31 (26) ஓட்டங்களும், சினாலோ ஜாஃப்டா 29 (17) ஓட்டங்களும் எடுத்தனர். 
அலானா கிங் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கிண்ணத்தில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
மேலும், மகளிர் உலகக்கிண்ண வரலாற்றில் 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற இமாலய சாதனையையும் படைத்தார்.
இப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இது நடப்பு தொடரில் அவுஸ்திரேலியாவின் தொடர்ச்சியான 6வது வெற்றியாகும்.
WHAT!!!
— cricket.com.au (@cricketcomau) October 25, 2025
Barely believable figures from an immense performance ✨✨✨ #WorldCup pic.twitter.com/qVPfuaqcb0
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |