போலந்தில் அதிகாலையில் ஒலிக்கப்போகும் சைரன்கள்: யாரும் அச்சப்பட வேண்டாம் என அறிவிப்பு!
ஸ்மோலென்ஸ்க்(Smolensk) பகுதியில் நடைபெற்ற பேரழிவில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில், நாளை போலந்து நாட்டில் அபாயத்தை குறிக்கும் சைரன்கள் ஒலிகள் ஒலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர்த்தாக்குதல் எப்போது முடியும் என கணிக்கமுடியாமல் நீடித்துக்கொண்டே இருக்கும் நிலையில், உக்ரைனுக்கு மிகப்பெரிய உறுதுணையாக அதன் அண்டைநாடான போலந்து பல உதவிகளை செய்து வருகிறது.
மேலும் ரஷ்யாவின் தீவிர தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக தாய்நாட்டை விட்டு வெளியேறி உள்ள 4 மில்லியன் உக்ரைனிய மக்களில் பெரும்பாலானோருக்கு போலந்து தற்காலிக இருப்பிடம் வழங்கி வருகிறது.
இந்தநிலையில், போலந்தில் நாளை அதிகாலை 8:41 மணியளவில் அலாரம் சைரன்கள் ஒரு நிமிடங்கள் வரை ஒலிக்கும் என தெரிவித்துள்ளது.
இந்த சைரன் ஒலிகளை கேட்டு பொதுமக்கள் யாரும் அஞ்சவேண்டும் என்றும், இது போர் சம்பந்தப்பட்டதோ, அல்லது உக்ரைனின் தற்போதைய அச்சறுத்தல் குறித்ததோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஸ்மோலென்ஸ்க்(Smolensk) பகுதியில் நடைபெற்ற பேரழிவில் உயிரிழந்தவர்களை நினைவு கூறுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மோலென்ஸ்க்(Smolensk) தற்போது ரஷ்யாவின் மேற்கு எல்லை பகுதியில் ரஷ்யாவின் ஆளுகைக்குள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைனுக்கு கனடா மற்றும் ஐரோப்பா வழங்கிய வாக்குறுதி! போரில் வெல்வதே முக்கியம்!