மொத்த விமான சேவையையும் ரத்து செய்த பிரபல விமான சேவை நிறுவனம்
ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட ஐடி கோளாறு காரணமாக, அமெரிக்க விமான நிறுவனமான அலாஸ்கா ஏர்லைன்ஸ் தனது அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.
விமானங்கள் அனைத்தும்
ஞாயிற்றுக்கிழமை பசிபிக் நேரம் (திங்கட்கிழமை 0300 GMT) இரவு 8 மணியளவில், அலாஸ்கா ஏர்லைன்ஸ் ஒரு ஐடி செயலிழப்பை சந்தித்தது, இதனால் மொத்த செயல்பாடுகளும் பாதிப்புக்கு உள்ளானது என அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
மேலும், தற்காலிகமாக அலாஸ்கா மற்றும் ஹாரிசன் ஏர் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், மாலை முழுவதும் அதன் செயல்பாடுகளில் எஞ்சிய பாதிப்புகள் இருக்கும் என்றும் கூறியது.
ஆனால் விரிவான விளக்கம் எதுவும் இந்த விவகாரத்தில் அந்த நிறுவனம் வெளியிடவில்லை. 238 போயிங் 737 விமானங்கள் உட்பட மொத்தமாக 325 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானங்களின் வருகையைத் திட்டமிட்டுள்ள அனைத்து விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |