தொழில்நுட்ப செயலிழப்பு... மொத்த விமானங்களையும் ரத்து செய்த முக்கிய நிறுவனம்
அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அதன் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதால், அனைத்து விமானங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
தொழில்நுட்ப செயலிழப்பு
இந்த நடவடிக்கை அலாஸ்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹாரிசன் ஏர் விமான சேவைகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 70 நிமிடங்கள் வரையில் சேவைகளில் தாமதம் ஏற்படலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம் இதுபோன்று தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக சுமார் 3 மணி நேரம் விமான சேவைகள் அனைத்தையும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் முடக்கியிருந்தது.
சமூக ஊடக பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அலாஸ்கா ஏர்லைன்ஸ், அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப செயலிழப்பால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்காலிக சேவை முடக்கம் அமுலில் உள்ளது.
சிரமத்திற்கு வருந்துகிறோம் என குறிப்பிட்டுள்ளனர். இதனிடையே, சேவை முடக்கம் தொடர்பில் கவலைகள் மற்றும் புகார்களைப் பதிவிடும் வாடிக்கையாளர்களுக்கு விமான நிறுவனம் சமூக ஊடகங்களிலும் பதிலளித்து வந்தது.
துரதிர்ஷ்டவசமாக, தொழில்நுட்ப செயலிழப்பை நாங்கள் சந்திக்கிறோம், ஆனால் எங்கள் தொழில்நுட்ப குழு இதை விரைவில் தீர்க்க பாடுபடுகிறது என்றும் பதிலளித்துள்ளது,

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |