அலாஸ்காவில் 8 பேருடன் பறந்த Charter விமானம் விபத்து: தேடுதல் பணி தீவிரம்
Alaska Charter plane crashed near cape newenham: அலாஸ்காவில் 8 பேருடன் பறந்த Charter விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம்
மேற்கு அலாஸ்காவின் தொலைதூர ரேடார் நிலையம் அருகே 2 விமானிகள் மற்றும் 6 பயணிகள் என 8 பேருடன் சென்ற Charter விமானம் விபத்துக்குள்ளாகி இருப்பதாக என தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் தகவல் படி தெரியவந்துள்ளது.
விமானம் ஆங்கரேஜில்(Anchorage) இருந்து புறப்பட்டு கேப் நியூஹாம்(Cape Newenham) நோக்கிச் சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில் அதில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் மற்றும் அவர்களின் தற்போதைய நிலைமை குறித்தும் எந்தவொரு தகவலும் தெரியவரவில்லை.
விபத்தை தொடர்ந்து அலாஸ்கா மீட்பு ஒருங்கிணைப்பு மையம் விபத்து தொடர்பான தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை தொடங்கியுள்ளது.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய உள்ளூர் அதிகாரிகள் மற்றும் விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்களை திரட்டி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |